புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்ற
அறிவுறுத்தலின் படி அனைத்து மாநிலங்களும், பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரியில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம். மேலும் அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இணைய வழி பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் போன்ற அமைதி மண்டலங்களைச் சுற்றி 100 மீட்டர் வரையிலான பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசுகளின் பயன்பாடு கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படிதான்
இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.