எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து கொண்டே செல்வதாகவும், அனைத்து வழக்குகளிலும் அவர் தண்டனை பெறுவது உறுதி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் அணியில், சேலம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
செயலாளர்கள், புகழேந்தி தலைமையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பெரியார், அண்ணா
சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, ”எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார்கள் தொடர்ந்து கொண்டே போவதால் தான் பிரதமர் அவரை சந்திக்க மறுக்கிறார்.
பழனிசாமி மீதான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதனால் அவர் தேர்தலிலேயே நிற்க முடியாத ஒரு நிலை ஏற்படும். விரைவில் பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். மிகக் கேவலமாக பேசுவதை வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளது தமிழக அரசு. முதல்வரை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.








