சிவாகாசி அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து – 2 பேர் உயி*ழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பட்டாசு ஆலை தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

இந்த விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை மீட்கப்பட்டு சிகிசை பெற்று வந்த அகமது இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.