ஜெர்மனி மருத்துவமனையில் தீ விபத்து – 3 நோயாளிகள் உயிரிழப்பு!

ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மரியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் கடும் புகை சூழ்ந்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 84, 85 மற்றும் 87 வயதுடைய முதியவர்கள் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து 20 நிமிட போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், 72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.