முக்கியச் செய்திகள் தமிழகம்

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக ஜெயவிநாயகா பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை மாரனேரி, பூலாரணி , விளாம்பட்டி, திருவேங்கடம் போன்ற கிராம பகுதிகளில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கி ஜெயவிநாயகா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் உதவி ஆட்சியர் பிருத்விராஜ் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

காமராஜர் 119 வது பிறந்த நாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

Gayathri Venkatesan

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது; அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து!

Saravana