அல்லிகுண்டம் மலையில் காட்டுத் தீ : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலையில் நேரிட்ட காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். அல்லிகுண்டம் மலையில் அரிய வகை மரங்கள் மற்றும் மான், மயில்,…

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலையில் நேரிட்ட காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அல்லிகுண்டம் மலையில் அரிய வகை மரங்கள் மற்றும் மான், மயில், காட்டு பன்றி, கரடி உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன. இந்த மலையில் நேற்றிரவு இரவு 7 மணியளவில் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது, மளமளவென்று காட்டுத்தீயாக பரவி, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கொளூந்து விட்டு எரிந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இது போன்ற கோடை காலங்களில் மலையில் ஏற்படும் தீவிபத்தை தடுக்கவோ, தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை முன் வருவதில்லை எனவும்
தீ பற்றி எரியும் போதே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் வன உரியனங்களும் அரிய வகை மரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதில் அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் எரிந்து சேதமுற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.