மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து – பணம், நகைகள் தீயில் கருகி நாசம்!

திருவிடைமருதூர் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 14 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சம் தீயில் கருகி நாசமானது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் கிராமம் அணக்குடி சாலையை…

திருவிடைமருதூர் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 14 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சம் தீயில் கருகி நாசமானது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் கிராமம் அணக்குடி சாலையை சேர்ந்த சேகர் என்பவரது கூரை வீடு மின் கசிவின் காரணமாக தீ பற்றி எரிந்தது. மேலும் அருகில் உள்ள கார்த்திகேயன் என்பவரின் வீடும் தீ பற்றியது. இந்த தீ விபத்தில் மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாகின.

தகவல் அறிந்து வந்த கும்பகோணம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர். தீ விபத்தில் சுமார் 14 பவுன் தங்கமும் 15 லட்சம் ரூபாய் பணமும் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். பொருள் இழப்பினை தாங்க முடியாமல் மூன்று குடும்பத்தினரும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம் பவத்தில் எந்தவித உயிர்சேதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.