ரயில் விபத்துகளை தடுக்க சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகள் கூறுவது என்ன?

ரயில் விபத்து ஏற்படாமல் தடுக்க சாம் பிட்ரோடா குழு சில பரிந்துரைகள் வழங்கியுள்ளது. அவற்றைக் காணலாம். இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்குவது மற்றும் பாதுகாப்பு குறித்து 2012 ஆம் ஆண்டு சாம் பிட்ரோடா தலைமையிலான…

ரயில் விபத்து ஏற்படாமல் தடுக்க சாம் பிட்ரோடா குழு சில பரிந்துரைகள் வழங்கியுள்ளது. அவற்றைக் காணலாம்.

இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்குவது மற்றும் பாதுகாப்பு குறித்து 2012 ஆம் ஆண்டு சாம் பிட்ரோடா தலைமையிலான வல்லுநர் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளை என்ன என்பது குறித்து காணலாம்.

– ரயில்வே வழித்தடங்களில் உள்ள 11,250 பாலங்களை பலப்படுத்த வேண்டும்.

– ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்

– முக்கியமான “ஏ” மற்றும் “பி” ரயில் மார்க்கங்களில் தானியங்கி சிக்னல்களை ஏற்படுத்த வேண்டும்

– நவீன தொழில்நுட்பங்களை கொண்ட  ரயில்பெட்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும்

– நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சரக்கு போக்குவரத்துக்கென தனியான வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும்

– ரயில்வே பற்றிய ஆய்வுக்காக தனி நிறுவனத்தை உருவாக்க வேண்டும்

– ரயில்வே தொழில்நுட்பங்கள் குறித்து ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎம்களில் பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்

– ஏ, பி, சி வழித்தடங்களில் ஜிஎஸ்எம் அடிப்படையிலான மொபைல் கட்டுப்பாட்டு முறையை ஏற்படுத்த வேண்டும்.

– ரயில் வழித்தடங்களில் உள்ள ட்ராக்குகளை இயந்திரமாக்கப்பட்ட தொழிநுட்பத்துடன் பராமரிக்க வேண்டும்

– ரயில்வே பணிமனைகளை நவீனப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்க வேண்டும்

– ரயில் தண்டவாளங்களை யானை மற்றும் கால்நடைகள் கடப்பதை தடுக்க டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மற்றும் Ultrasonic மூலம் ஒலி எழுப்பும் கருவிகளை அமைக்க வேண்டும் 

– பேரிடர் மேலாண்மை  தொடர்புடைய சேவைகளை மேம்படுத்த வேண்டும்

– இணைய சேவைகளை மேம்படுத்துதல்.

– பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூக வலைதளங்கள் மற்றும் பிற புதிய தொழிநுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.