வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூங்கில் மற்றும் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமச்சியாபுரம்காலனி பகுதியில் உள்ள
சிவகுரு என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த நிலையில் தோப்பை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மூங்கில் வேலியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் தீயானது பரவி தென்னை மூங்கில் மரத்தில் பிடிக்க துவங்கியது. பின்னா் முள்வேலியிலும் தீயானது பரவியது. இது குறித்து பொதுமக்கள் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரூபி.காமராஜ்







