கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் முதல்போக சாகுபடிக்காக நிலத்தில்
செடி தளை இலைகளை உரமாக இட்டு, நெல் நாற்று நடவு செய்யும்
பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணையாற்றின் வழித்தடமாக இருப்பது,
பிரசித்தி பெற்ற பாரூர் பெரிய ஏரி. கே.ஆர்.பி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றின் வழியாக பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டு பாரூர் ஏரியையும் நிரப்புகிறது. இதனை நம்பி கரையோர கிராமங்களில், சுமார் 4ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.
இதில் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பண்ணந்தூர், அகரம், அரசம்பட்டி, வாடமங்கலம்,
செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், காவப்பட்டி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆண்டுதோறும் 3ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிட்டு வருகின்றனர். பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்காக கடந்த 03.07.2023 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் நிலத்தை சீர் செய்தல், நாற்று விடுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். வயலுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து தழை உரம் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
—கு. பாலமுருகன்







