உலகம்

அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு தேர்தல் அதிகாரியை வற்புறுத்தினாரா அதிபர் ட்ரம்ப்?; ஆடியோ வெளியானதால் சர்ச்சை!

அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு ஜார்ஜியா மாகாண ஆளுநரிடம் ட்ரம்ப் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபர் ட்ரம்பை காட்டிலும் 74 தேர்வாளர் குழு வாக்குகளை பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள தொடந்து மறுத்துவரும் அதிபர் ட்ரம்ப் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலுல் தேர்தல் மோசடி தொடர்பாக அவர் தாக்கல் செய்த 60 வழக்குகளையும் அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் அதிகாரியிடன் அதிபர் தேர்தல் முடிவை மாற்ற வாக்குகளை கண்டுபிடிக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டென் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட அந்த ஆடியோவில், ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதற்கு சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி
ராஃபென்ஸ்பெர்கரிடன் ட்ரம்ப் கூறுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் தனக்கு கூடுதலாக 11,780 வாக்குகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் அந்த வாக்குகளை பெற்றால் மொத்தம் 2,473,634 வாக்குகளுடன் அதாவது பைடன் பெற்ற 2,473,633 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றிருப்பார். இந்த ஆடியோ தற்போது அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இருப்பினும் இந்த ஆடியோ தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எந்த கருத்தையும் தெருவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!

Saravana

44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா

Mohan Dass

விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

Halley Karthik

Leave a Reply