சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நீதிபதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.







