ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
கொரோனாவின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வருவதற்குள் ராஜஸ்தானில் மற்றொரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இறந்த காகங்களில் அபாயகரமான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காகங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில பறவைகளும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பாதிப்பால் மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.