’வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி’

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10 மணி அளவில் இந்த பட்ஜெட் தாக்கலை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை; இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும் எம கூறி தனது வேளாண் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

வேளாண் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

  • இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க, வேளாண் & தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி; ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்
  • பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்; இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
  • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு; மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு
  • சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
  • மாநில, மாவட்ட அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்; நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
  • சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்; சூரியகாந்தி சாகுபடி பரப்பு உற்பத்தித் திறன் உயர்த்தப்படும்.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
  • ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்
  • கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.