ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உததரவின்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல் நகரத் திட்டத் துணைத் தலைவராக தேவ் ராஜ் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







