டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

வருமான வரித்துறையினர் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி பன்னு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு உட்பட 20 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை மற்றும் புனேவில்,…

வருமான வரித்துறையினர் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி பன்னு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு உட்பட 20 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மும்பை மற்றும் புனேவில், அனுராக் காஷ்யப்பின் பாண்டம் பிலிம்ஸ், மற்றும் நடிகை டாப்ஸி பன்னுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனையை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

சமீபக் காலமாக மத்திய அரசின் சட்டங்களுக்கும் எதிராக தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்திருந்தனர். டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்த சர்வதேச பிரபலம் ரிஹான்னாவின் ட்வீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்து டாப்ஸி கருத்து தெரிவித்திருந்தார். பாலிவுட் திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் மத்திய அரசின் கருத்துக்கு ஆதரவாக நின்ற நிலையில், டாப்ஸி போன்ற சில நடிகர்கள் தங்கள் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தியிருந்தனர்.

வருமான வரித்துறையின் இந்த சோதனை நடவடிக்கை பாலிவுட் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநில அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கவே இம்மாதிரியான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது என அம்மாநில சிவசேனா அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.