முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படமாக எடுக்கிறோம்; பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தயாரிப்பாளர்

திரைப்படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றியதுடன் 3க்கும் மேற்பட்ட இளம் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கரூர் மாவட்டம் நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (35). இவர் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதலிப்பதாக கூறி பண்ணை வீடுகளுக்கு அழைத்து சென்று கற்பழித்ததுடன், அவற்றை வீடியோ படமெடுத்து வைத்து இளம்பெண்களை மிரட்டி அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்த சம்பவம் வெளியாகி பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்பட்டு, இந்த சம்பவம் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சம்பவத்தை மையமாக வைத்து படமெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்க இளம் பெண்கள் தேவை எனவும் பார்த்திபன் ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை நம்பி ஏராளமான பெண்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள லாட்ஜில் நடந்த இன்டெர்வியூவில் பங்கேற்க வந்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிக்க விரும்பி கோவையில் உள்ள தனியார் கால்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் பட்டம் படித்து வந்த இளம்பெண்ணும் சென்றிருந்தார்.

இன்டெர்வியூவில் பங்கேற்க வந்த பெண்களிடம் விசாரணை நடத்திவிட்டு இறுதியாக கல்லூரி மாணவியிடம் பார்த்திபன் நேர்முக தேர்வு நடத்துவதாக கூறியுள்ளார். அப்போது மாணவிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த இளம்பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அப்பெண் கண்விழித்து பார்த்தபோது பார்த்திபன் அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதைக் கண்டு கதறி துடித்துள்ளனர். இதனையடுத்து பார்த்திபன் மீது போலீசில் புகார் கொடுக்கப்போவதாக சத்தம் போட்டுள்ளார். உடனே பார்த்திபன் அந்த பெண்ணிடம் உனக்கு கண்டிப்பாக சினிமா சான்ஸ் வாங்கி தருவேன். மேலும் உனக்கு தற்போது 17 வயது மட்டுமே ஆகிறது. உனக்கு 18 வயதாகும்போது உன்னையே திருமணமும் செய்து கொள்கிறேன். அதுவரை தொடர்ந்து கல்லூரியில் படித்து வா. படிக்கும்போதே நடிக்கவும், இயக்குனர் வாய்ப்பும் வாங்கி தருகிறேன். அதுவரை யாரிடமும் நடந்த சம்பவங்களை கூறவேண்டாம் என கெஞ்ச தொடங்கியுள்ளார். நீ கூறினால் உனக்குத்தான் அசிங்கம் எனவும் மிரட்டவும் செய்துள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இதுபற்றி புகார் கூறாமல் விட்டுவிட்டார். இதன்பின்னர் அந்த மாணவியை பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே 18 வயதானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மாணவி கேட்டுள்ளார். இதன்பின்னர் மாணவியிடம் பழகுவதை பார்த்திபன் குறைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பார்த்திபனை பற்றி மாணவி விசாரித்தபோது கேரளாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதும், அந்த பெண்ணையும் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. இதேபோல வேறுசில பெண்களிடமும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியதுடன் 2 பெண்களை திருமணம் செய்திருப்பதையும் அறிந்து மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பார்த்திபனிடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை செய்துகொள் என மிரட்ட தொடங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவி பார்த்திபன் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகார் மனுவில், தனக்கு சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்போதுதான் பார்த்திபன் தான் தயாரிக்கும் படம் குறித்து ஒன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். அதைப்பார்த்து இன்டெர்வியூவில் பங்கேற்க சென்றபோதுதான் குளிர்பானம் கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்.

இதன்பிறகு திருமணம் செய்துகொள்வதாக கூறி பல இடங்களுக்கும் அழைத்து சென்று என்னுடன் உறவு வைத்துக்கொண்டார். இதனால் நான் கர்ப்படைந்தபோது மாத்திரைகளை கொடுத்து என் கர்ப்பத்தையும் கலைத்துவிட்டார். என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்க தொடங்கியதும் என்னை விட்டு விலகி சென்றுவிட்டார். இதன்பிறகு விசாரித்தபோதுதான் என்னை போலவே பலரை ஏமாற்றி சிலரை திருமணமும் செய்துகொண்டது தெரியவந்தது. எனவே என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பல இளம் பெண்களை ஏமாற்றி மோசடி செய்த பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் போக்ஸோ பிரிவில் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பார்த்திபன் மீது கோவை வேடப்பட்டியை சேர்ந்த ஆசிரியை ஒருவரும், தன்னை திருமணம் செய்து பார்த்திபன் ஏமாற்றி விட்டதாக கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதேபோல திருவாரூரை சேர்ந்த கல்லூரி மாணவியும் தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் மனு கொடுத்திருந்தார். தற்போது கல்லூரி மாணவியும் புகார் மனு கொடுத்திருப்பது பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே சம்பவத்தை வைத்து படமெடுப்பதாக கூறி கல்லூரி மாணவிகளை சீரழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்களை கோவையில் அதிகமாக ஏமாற்றிவருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”24 மணி நேரத்தில் பதவி பறிபோகும்”- அதிருப்தி அமைச்சர்களுக்கு சிவசேனா எச்சரிக்கை

Web Editor

கொரோனா தடுப்பூசியால் மலட்டு தன்மை ஏற்படாது: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

Halley Karthik

”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

Janani