548 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்!

ஆயுதப்படை காவலர்களுக்கு கிளாப்ஸ் எனும் புதிய செயலி மூலம் விடுப்பு வழங்கப்பட்டு 9 ஆயிரம் காவலர்கள் விடுப்புப் பலன் பெற்றிருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 548 காவலர்களுக்கு பெருநகர சென்னை…

ஆயுதப்படை காவலர்களுக்கு கிளாப்ஸ் எனும் புதிய செயலி மூலம் விடுப்பு
வழங்கப்பட்டு 9 ஆயிரம் காவலர்கள் விடுப்புப் பலன் பெற்றிருப்பதாக சென்னை காவல்
ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

548 காவலர்களுக்கு பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழ்நாடு
முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்
விருதை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் 10 ஆண்டுகள்
சிறப்பாக பணியாற்றிய சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு 210, போக்குவரத்து
148, ஆயுதப்படையில் 78, மத்தியக் குற்றப் பிரிவு உட்பட 548 காவலர்களுக்கு
முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்சியில் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையர் லோகநாதன், காவல் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுகளை வழங்கினர்.

விருதுகளை வழங்கிய பின்னர் மேடையில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர்  ஜிவால், “இந்த ஆணடு வழக்கத்தைவிட 100 பதக்கம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதனை
அதிகப்படுத்திய தமிழக அரசுக்கும், தமிழக டிஜிபிக்கும் நன்றி. இந்தப் பதக்கங்களை பெற்ற காவலர்களுக்கு ஊதியம் 400 ரூபாய் கூடுதலாக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படை காவலர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கு CLOPS எனும் புதியதாய் ஒரு செயலி கொண்டு வரப்பட்டு அதில் 9 ஆயிரம் காவலர்கள் விடுப்புப் பலன் பெற்றுள்ளனர். மன அழுத்ததில் உள்ள காவலர்களுக்கு சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையானவை அளிக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டு காலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டது. இதே போன்று அனைத்து காவலர்களும் பணிபுரிய வேண்டும். காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் காவல் துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும்” என்றார்.

சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.