முக்கியச் செய்திகள் சினிமா

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படப்பிடிப்பு துவங்கியது

நடிகை சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். ரொமாண்டிக் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்குகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கான, அறிவிப்பு விஜயதசமியை முன்னிட்டு வெளியானது. அதேதினத்தில், 5 மொழிகளில் சமந்தா நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியானது. தற்போது அந்தப் படத்தின், படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார்கள். இதனை, ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாகும் இப்படத்திற்கு ‘யசோதா’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதனை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமந்தா முதன்மை வேடத்தில் நடிக்கும் யசோதா படத்துக்கு மணிசர்மா இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Gayathri Venkatesan

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

EZHILARASAN D

மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!

EZHILARASAN D