கர்நாடகாவில் கே.எப்.சி ஊழியரிடம் கன்னட மொழி பாடலை ஒலிபரப்புமாறு கேட்ட பெண்மணியிடம் அதை ஒலிபரப்ப முடியாது என்று மறுத்த கே.எப்.சி ஊழியர், இந்தி மொழி நம் தேசிய மொழி என்று பதிலளித்துள்ளார். இந்த சமப்வம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சோமாட்டோ டெலிவரி நிறுவனத்தின் செயலி வழியாக தமிழ்நாடு இளைஞர் விகாஸ் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு முழுமையாக வராததால், இதுதொடர்பாக புகார் அளிக்க அந்நிறுவனத்தின் சேவை மையத்திற்கு அவர் தொடர்பு கொண்டு தனது புகாரை தெரிவித்தார். அப்போது சேவை மைய அதிகாரி சமந்தப்பட்ட உணவகத்தை தொடர்பு கொண்டோம் ஆனால்,மொழி பிரச்சனை காரணமாக எங்களால் பேச முடியவில்லை என்று பதிலளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நிறுவனத்தின் சேவையை நடத்தும் நீங்கள் தமிழ் தெரிந்த ஒருவரை பணியில் அமர்த்தியிருக்க வேண்டாமா ? என்று இளைஞர் விகாஸ் கேட்டிருக்கிறார். மேலும் தன் பணத்தை பெற்று தருமாறும் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த சேவை அதிகாரி இந்தி நமது தேசிய மொழி என்றும் அதை அனைவரும் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்றும் பதிலளித்தார். இந்த உரையாடலை விகாஸ் சமூகவலைதளங்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. மேலும் இதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்த சர்ச்சையால் சோமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் தற்போது இதுபோன்ற வேறு ஒரு நிகழ்வு கர்நாடகாவில் நடந்துள்ளது. கே.எப்.சி உணவகத்திற்கு சென்ற பெண்மணி ஒருவர் கன்னட மொழி பாடலை ஒலிபரப்புமாறு அங்கு பணிபுரியும் ஊழியரிடம் கேட்டுள்ளார். இதை மறுத்த அந்த ஊழியர் இந்தி மொழி நமது தேசிய மொழி என்றும் பதிளித்துள்ளார். இவருக்கும் நீண்ட உரையாடல் நடந்திருக்கிறது. இந்த உரையாடலை வீடியே பதிவு செய்து அப்பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘கே.எப்.சி ஊழியர்களுக்கு கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ மொழியான கன்னடத்தை கற்றுக்கொடுங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.