மநீம தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் ஈடுபட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் ஈடுபட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒமிக்ரானுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனக் கூறினார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 5 ஆயிரத்து 249 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், 6 பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் ஈடுபட்டது குறித்து கமலிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.