முக்கியச் செய்திகள் சினிமா

கணவரை பிரிவதாக அறிவித்தார் நடிகை சமந்தா

நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரிய இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது மாமனார் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் இருந்த பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் நடித்த படங்களில் சில காட்சிகள் அவரது குடும்பத்தினருக்கு அப்போதே பிடிக்கவில்லை என கூற்ப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், திடீரென ஒருநாள் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கி வெறும் ‘S’ என்று மாற்றினார். இது இவருக்கும் நாக சைதன்யா குடும்பத்துக்கும் இடையே பிரச்னை இருப்பதை வெளி உலகிற்கு காட்டியது. அதன்பின்னர், சமந்தாவும், நாகசைதன்யாவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன்.

இதற்கு காரணம் அவரது மாமனார் நாகர்ஜூனா எனவும் கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உங்கள் மீதான மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் நலமாக இருக்க வேண்டும் என நாகர்ஜூனாவுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும், சமந்தாவும், நாகசைதன்யா விரைவில் விவாகரத்து செய்து கொள்வார்கள் என்ற பேச்சு ஓய்ந்தபாடில்லை. தற்போது, சமந்தாவும், நாகசைதன்யா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். நாங்கள் விவாகரத்து செய்தாலும் எங்களது நட்பு தொடரும் என அவர்கள் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Arivazhagan Chinnasamy

அதிமுக பொதுக்குழு வழக்கு; இன்று தீர்ப்பு

G SaravanaKumar

தரமற்ற உணவு; அழுது கொண்டு புகார் அளித்த காவலர்

G SaravanaKumar