2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று, ரவுண்ட் ஆஃப் 32 சுற்று மற்றும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று முடிவடிந்து காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. ஏற்கனெவே ஃப்ரன்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் காலிறுதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று அர்ஜண்டினா – ஸ்விட்சர்லாந்து இடையிலான காலிறுதிபோட்டி நடைபெற்றது.
பெரும் எதிர்பார்புக்கு மத்தியில், இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இரு அணிகளும் ஆர்ம்பம் முதலே தீவிரமாக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த நிலையில் ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜண்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை அடித்தார். இதனால் அர்ஜண்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து ஸ்விட்சர்லாந்து அணி முதல் கோலை பதிவு செய்ய போராடியது. இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. 68-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் டேன் டோயே கோல் அடித்தார். இதனால் போட்டி 1-1 என சமநிலை பெற்றது. தொடர்ந்து அர்ஜண்டினா அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது. ஆனால் ஸ்விட்சார்லாந்தின் டிஃபன்ஸ் பலமாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை. இதனிடையே ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவுக்கு வந்தது.
இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இந்த நிலையில் மேலும் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் அதிரடியாக ஆடிய அர்ஜண்டினா அணி ஆட்டத்தின் 112-வது நிமிடத்தில் ஒருகோல் அடித்து 2-1 என முன்னிலை ப் பெற்றது. இந்த கோலை ஜூலியன் ஆல்வாரெஜ் அடித்தார். இதனையடுத்து 121-வது நிமிடத்தில் அர்ஜண்டினாவின் லாவ்தரோ மார்டினெஸ் மூன்றாவது கோலை அடித்தார். இதனையடுத்து போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் அர்ஜண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
2026 உலககோப்பையில் அனைத்துப் போட்டியிலும் கோல் அடித்த மெஸ்ஸி இந்த போட்டியில் கோல் அடிக்காதது ஏமாற்றமளித்தது.
இந்த நிலையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அர்ஜண்டினா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதேபோல14-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஃப்ரான்ஸ் – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
=




