இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி 20 தொடரை இங்கிலாந்து அணி 4 – 0 என கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 14 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையடுத்து இம்மாத இறுதியில் இந்திய அணி ஜும்பாப்ம்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது.
ஜும்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தியும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாயை அணியில் சேர்த்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாற்றத்திற்கு பின் இந்திய அணி
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்). கே.எல். ராகுல் (WK). இஷான் கிஷன் (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, குல்தீப் யாதவ். பிரஷ்ரீப் கிருஷ்ணா, அர்ஷ்ரீப் சிங். குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ்.
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்). வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்). இஷான் கிஷன் (WK). சிவம் துபே. சூர்யன்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யக்ஷ் தாவூர், அஷோக் ஷர்மா, பிரின்ஸ் ஷர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (WK), ரவி பிஷ்னோய்.




