முக்கியச் செய்திகள் தமிழகம்

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்!

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் இங்குதான் நடைபெறும். தமிழக அரசின் வருவாயிலும் பதிவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்,  “துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்துப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்குத் தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என பரிந்துரை வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். 

Advertisement:

Related posts

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

Jeba

கொரோனா பாதுகாப்பை 3 மாதம் பின்பற்ற வேண்டும்: மகேஷ்குமார் அகர்வால்

Ezhilarasan

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமணம்

Jayapriya