முக்கியச் செய்திகள் இந்தியா

தீபாவளி பண்டிகை; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆடைகளை அணிந்தும், பலகாரங்களை உண்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபட்டு ஆசிபெற்று வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!.

ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான புனித திருவிழாவில், அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர நாம் முயற்சி செய்வோம். இந்த பெருவிழாவில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருக வேண்டி கொள்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேலும் அதிகரிக்கட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்’ என பதிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

Halley Karthik

ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்

G SaravanaKumar

முகநூலில் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி?

G SaravanaKumar