ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாக இளம் இசை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவர் உடன் தேவாலயத்திற்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததார்.
மேலும் வேறு பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிந்து தான் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அப்போது தன்னுடன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரது தந்தை செல்வகுமாரிடம் தெரிவித்த போதும் மகனுக்கு உடந்தையாக செயல்பட்டு தன்னை மிரட்டினார்.
மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் எனது ஆபாசமான போட்டோ வீடியோக்களை வெளியிட்டார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததார்.
மேலும் இசை அமைப்பாளர் என்பதால் சபேஷ் சாலமன் என்பவர் வாட்சப்பில் பாட்டு
பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆடியோ ஆதாரங்களையும் இந்தப் புகார் மனுவில் இணைத்துள்ளேன். தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் யூடியூபரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பெயரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல்,
இணையதளங்களை தவறாக பயன்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-மணிகண்டன்








