நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்துக்கு பிறகு தென்னிந்திய மண் சார்ந்த இசையும், பாடல்களும் உள்ள படமாக யானை படம் இருக்கும் என்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.
நாளை மறுநாள் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள யாணை
திரைப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள
பிரசாத் லேபில் நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் ஹரி, நடிகர் அருண் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், “யானை திரைப்படத்தில் இசையமைக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. அசுரன் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் மண் சார்ந்த இசையும் பாடல்களும் யானை திரைப்படத்தில் இருக்கும். முதல் பட இயக்குனர் போல கடின உழைப்போடு இயக்குனர் ஹரி படத்தை எடுத்துள்ளார்” என்றார்.
அதன் பின் பேசிய படத்தின் நாயகன் நடிகர் அருண் விஜய் 25ஆண்டு திரையுலக
உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய படமாக யானை படத்தை பார்க்கிறேன் என்றும் நான்
ஜி.வி.பிரகாஷின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய படத்தின் இயக்குனர் ஹரி நான் மக்களோடு மக்களாய் சுத்தியவன்.
என்னுடைய மற்ற படங்கள் போல எடுத்தவுடனே டயலாக் வேண்டாம் என முடிவு செய்து இந்த படத்தை எடுத்துள்ளேன் என்றார்.
-மணிகண்டன்








