வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் திடீரென கொழுந்து விட்டு எறிந்த தீயால் இருசக்கர வாகனங்கள் நாசமாகின.
சென்னை ஆவடி கவரப்பாளையம் அருகில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய சரக்கு லாரிகள் நிறுத்துவது வழக்கம். இதனால் எப்பொழுதும் போல் அதே இடத்தில் பூனே பஜாஜ் தொழிற்சாலையில் இருந்து சென்னைக்கு 40 பஜாஜ் உயர்ரக இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்த வெளிமாநில லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரில் இருந்து திடீரென கரும்புகைகள் வெளிவந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் லாரியை விட்டு வெளியேறினார். பின்னர் திடீரென்று லாரியிலிருந்து வெடிக்கும் சத்தம் கேட்டது . இதனை கேட்ட சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகால், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, லாரிகை நோட்டுமட்டனர்.
இந்த நேரத்தில் திடீரென லாரியில் இருந்து மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் லாரியில் கொண்டு வரப்பட்ட புதிய வகை இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து நாசம் ஆகியது. இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ஆவடி கவரப்பாளையம், பெட்ரோல் நிலையம் அருகே கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது, மின்சார ஒயர் அறுந்து விழுந்து தீப்பிடித்தது தெரியவந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா