டைம் டிராவல் மூலம் பிப். 14ஐ Skip செய்வது எப்படி..? – சிங்கிள்ஸ்களுக்கு சர்பிரைஸ் காத்திருக்கிறது.!

காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் டைம் டிராவல் மூலம் பிப். 14ஐ Skip செய்வது எப்படி என்கிற சுவாரஸ்ய தகவலை காணாலாம். உலகமே காதலால் நிரம்பி வழிகிறது. காதல் இல்லாமல் இங்கே…

காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் டைம் டிராவல் மூலம் பிப். 14ஐ Skip செய்வது எப்படி என்கிற சுவாரஸ்ய தகவலை காணாலாம்.

உலகமே காதலால் நிரம்பி வழிகிறது. காதல் இல்லாமல் இங்கே சக மனித வாழ்வு என்பதே கேள்விக்குறிதான். மனிதர்களையும் தாண்டி அனைத்து உயிரினஙகளுக்கு பொதுவான ஒன்றாக காதல் இருந்து வருகிறது.  காதலர்கள் இவ்வுலகத்தை விட்டு மறையவோ அல்லது தங்களது காதலை முறித்துக் கொள்ளவோ செய்யலாம் ஆனால் காதலுக்கு முடிவு என்பதே இல்லை. காதல் முடிவதே இல்லை.

காதலை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதற்கான தயாரிப்புகளில் காதலர்கள் மிகத் தீவிரமாக இறங்கிவிடுவர்.  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்திற்கு பிப்ரவரி 7ம் தேதி முதலே ஒவ்வொரு தினமாக தொடங்கி கடைசியில் தங்களை காதலை வெளிப்படுத்திக் கொள்வர்.  இதனை காதல் வாரம் என்றே அழைக்கலாம்.

உலகமே காதலால் கரைந்துபோனாலும் பிப்பரவரி 14-ஐ அடியோடு வெறுக்கும் சிங்கிள்களும், காதல் தோல்வி அடைந்தவர்களும் கணிசமான அளவு இருக்கின்றனர். இவர்களுக்காகவே பிரபல சாக்லேட் நிறுவனமான  கேட்பரி 5 ஸ்டார் ஒரு புதிய பிரசாரத்தை இந்த வருடம் முன்னெடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்.14-ஐ Time Travel  மூலம் காணாமல்போகச் செய்வதே அந்தப் புதிய பிரசாரம் நோக்கம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல சாக்லேட் நிறுவனங்கள் புதிய புதிய உத்திகளை கையாண்டு தங்களது வியாபாரத்தை அதிகரிக்க செய்யும். ஆனால்  காதலர் தினத்தை வெறுக்கும் சிலருக்காகவே பை ஸ்டார் நிறுவனம் ‘டூ நத்திங் (Do nothing)’ என்ற பிரசாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுத்துவருகிறது.  இதன் படி கடந்த ஆண்டு காதலர்கள் இல்லாத அல்லது காதலர்கள் ஒன்றுகூடாத இடங்களைக் கண்டுபிடிக்கும் செயலி ஒன்றினை பை ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் இந்த ஆண்டு பிப்.14 ஐ முன்னிட்டு அந்த நாளையே டைம் டிராவல் மூலம் கடந்துவிடும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.  அதன்படி மூன்று பேர் இந்த ஆண்டு பிப்.13 தேதியிலிருந்து பிப்.15 தேதிக்கு பயணிக்கின்றனர்.  இதன் மூலம்  பிப்.14 2024 எனும் நாள், அந்த 3பேரின் வாழ்க்கையில் இருக்கவே இருக்காது.  இந்த புதிய பிரசாரத்தை கேட்பரி 5 ஸ்டார் இந்திய நேரப்படி பிப்.14 மாலை 4 மணிக்கு செய்துகாட்ட விருக்கிறது. மேலும் இதனை லைவ் ஸ்ட்ரீம் செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தக் காலப்பயணம் எப்படி சாத்தியம் என்பதை விஞ்ஞானி நம்பி நாராயணன் விளக்கும் காணொலியையும் 5 ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மூன்றுபேர் இருக்கும்  பெரிய கப்பல் ஒன்று அமெரிக்க சமோவாவிலிருந்து சமோவாவின்  கடல் எல்லையைத் தாண்டவிருக்கிறது. அப்போது சர்வதேச நேரத்தின்படி அமெரிக்காவில் உள்ள சமோவாவில் பிப்.13 இரவு 11.59 மணியாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில்  எல்லையைத் தாண்டும்போது சமோவாவில் பிப்.15 ஆம் நாள் துவங்கியிருக்கும்.

அதாவது சர்வதேச நேரத்தின்படி 24 மணிநேரம் என்பது  ஒரு நிமிடத்தில் கடந்து விடும். பிப்.14 எனும் நாள் அந்த மூவருக்கும் சர்வதேச நேரத்தின்படி ஒரு நிமிடம் மட்டுமே.
பிப்.14ஐ சந்திக்க விரும்பாத அந்த மூவரும் 5 ஸ்டார் சாப்பிட்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் (Do nothing) என பை ஸ்டார் நிறுவனம் கூறியுள்ளது. இந்த  ஆண்டு காதலர் தினம் வேண்டாம் எனும் கோரிக்கை வைக்கும்  சிங்கிள்கள் எல்லோரும் இந்த சரித்திர நிகழ்வைக் காண ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.