விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை…!

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டதில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இப்போரட்டத்தின் போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.