ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய N6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்….!
டிஸ்ப்ளே
ஒன்பிளஸ் N6 ஆனது 166.47 மிமீ நீளம், 78.23 மிமீ அகலம் மற்றும் 8.88 மிமீ தடிமன் கொண்டது. இதன் எடை 224 கிராம் ஆகும். இந்தச் சாதனத்தில் 6.8-அங்குல HD+ (1570 X 720 பிக்சல்கள்) LCD திரை, 120Hz வரையிலான புதுப்பிப்பு விகிதம், 1200 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம், கண் பாதுகாப்பு முறை, உறக்க முறை, ஸ்மார்ட் ஸ்விட்ச் புதுப்பிப்பு விகிதம் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
வண்ணம்
இது ஃப்ரெஷ் மின்ட் மற்றும் மிட்நைட் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
பிராசஸர்
இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 63760 அப்பெக்ஸ் சிப்செட் இடம்பெற்றுள்ளது, இது 6 லட்சத்திற்கும் அதிகமான ஆன்டுடு (AnTuTu) புள்ளிகளைப் பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த பிராசஸர் 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதை 2TB வரை விரிவாக்க முடியும்.
விலை
ஒன்பிளஸ் N6 இரண்டு உள்ளமைப்புகளில் வருகிறது.
4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 22,999
6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 24,999
கேமரா
ஒன்பிளஸ் N6-ல் 50MP முதன்மை கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா என இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த சாதனம் 1080p resolution-னில் 60 FPS வேகத்தில் FHD வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது. இதில் 8MP முன்புற கேமரா உள்ளது.
பேட்டரி
இந்த ஃபோனில் 8,000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர் வூக் (SuperVOOC) வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், இந்த ஃபோன் 5W ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஒன்பிளஸ் N6, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டையும், தற்செயலான வீழ்ச்சிகள் மற்றும் கீறல்களிலிருந்து சாதனத்தைப் பாதுகாப்பதற்கான MIL-STD-810H இராணுவத் தரச் சான்றிதழையும் கொண்டுள்ளது.
விற்பனைக்கு எப்போது…?
புதிய கைபேசியானது, 2026 ஜூலை 4 ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்.
அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் நிறுவனம் ரூ. 2,000 உடனடி வங்கித் தள்ளுபடியையும், கூடுதலாக ரூ. 1,000 தள்ளுபடியையும் வழங்குகிறது. இதன் மூலம், 4ஜிபி மாடலின் விலை ரூ. 19,999 ஆகவும், 6ஜிபி மாடலின் விலை ரூ. 21,999 ஆகவும் குறைகிறது.




