குருவாயூர் கோயில் யானை வலிய மாதவன்குட்டி மரணம்

குருவாயூர் கோயிலின் மூத்த யானையான வலிய மாதவன் குட்டி (வயது 61) உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கேரள மாநிலம் குருவாயூர் கோயிலின் மூத்த யானை, வலிய மாதவன்குட்டி. கடந்த 1974 ஆம் ஆண்டு பாலக்காடை…

குருவாயூர் கோயிலின் மூத்த யானையான வலிய மாதவன் குட்டி (வயது 61) உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலின் மூத்த யானை, வலிய மாதவன்குட்டி. கடந்த 1974 ஆம் ஆண்டு பாலக்காடை சேர்ந்த குன்னத்தேரி நாராயணன் நாயர் என்பவரால் கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த யானை, அப்போது பிரபலமான யானையாக இருந்தது.

1976 ஆம் ஆண்டு ’கஜமேளா’வில் சிறந்த யானையாக தேர்வு செய்யப்பட்ட பிரமாண்ட இந்த மாதவன் குட்டி, கிருஷ்ணர் சிலையை, பலமுறை சுமந்து சென்றுள்ளது.

இந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் யானையால் நிற்க கூட முடியவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தது. மாதவன்குட்டி உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.