புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அம்மாநில போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இன்று தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் இந்த நேரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
போராட்டத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.