தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரிய நாயகி அம்மன் உடனாய பெருவுடையார் திருக்கோயிலில் மஹா நந்தியம் பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஆடி மாத பிரதோஷ தினத்தினை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு திரவிய பொடி மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
இந்த ஆண்டு கொரனோ தொற்று தடுப்பு நடவடிக்கையால் அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.