பட்டுக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரியக்கோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர், அதே பகுதியை சேர்ந்த பூமிநாதனிடம் கடன் வாங்கியுள்ளார். கந்துவட்டி முறையில் அதிக வட்டிகேட்டு நெலை செருக்கடி அளித்ததால் மனமுடைந்த சுப்பிரமணி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனைவி சுமதி தனது இரண்டு மகள்களுடன் கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.







