முக்கியச் செய்திகள் தமிழகம்

“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

பெண்களுக்கு பொதுஇடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவல்துறையின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்தினார். காவல்துறை என்பது, குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

Saravana Kumar

ஷீர்டி சாய்பாபா கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

Saravana Kumar

பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை!

Saravana