பொன்னியின் செல்வன் படத்திற்கும், அதில் இடம் பெற்றிருந்த ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால், பல மொழிகளில் நடிகர் விக்ரம் நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -பாகம் 1 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட அனைத்து கதாப்பாத்திரங்களும் இணையதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் தனது கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நன்றி..தேங்க்ஸ்..நன்னி..தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி. தான் நிறைய படங்களில் நடித்திருக்கேன். நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி” கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடுவதை பார்க்கும்போது, இதை விட மகிழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடையாது என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்