நடிகர் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி அவரது வீட்டின் முன் ரசிகர் ஏரளாமானோர் திரண்டு தளபதி தளபதி என கோஷமிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று நடிகர் விஜயின் 48 வது பிறந்த நாளை விஜயின் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் முன்பு கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் திருச்சி, திருத்தனி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகர் விஜயின் பிறந்தநாளான இன்று அவரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அவருடைய ரசிகர்கள் கேக்குடன் அவரது வீட்டின் முன்பு வந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தும் விஜயை பார்க்க முடியாததால் அவருடைய ரசிகர்கள் வீட்டின் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் தேங்காய்யில் கற்பூரம் ஏற்றி த்ரிஸ்டி கழித்தனர். பின்னர் விஜய் பிறந்தநாளின் அவரது வீட்டிற்கு வந்த சென்றதின் நாபகமாக வீட்டின் முன்பு நின்று ரசிகர்கள் அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். மேலும் வருகை தந்து விஜய் வீட்டு வாசலில் தளபதி தளபதி என கோஷமிட்ட விஜயின் குட்டி ரசிகர்களான சிறுவர்களுக்கு விஜய் வீட்டில் இருந்து ஹேப்பி பர்த்டே என்ற பலூனை வழங்கியதால், ரசிர்கள்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
தேங்காய் உடைத்தும், கேக் வெட்டி விஜயின் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள், பல மைல் தொலைவில் இருந்து வருகிறோம் கையையாவது அசைங்க தளபதி என ஏமாற்றத்துடன் திரும்பும் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆந்திராவில் இருந்து வந்த குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்தூர் மாவட்டத்தில் இருந்தது நாங்கள் 15-க்கும் மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வந்துள்ளோம். இந்த வருடம் தளபதியின் பிறந்தநாளை குடும்பத்துடன் இங்கே கொண்டாட வந்து உள்ளோம். காலையில் இருந்து தாளபதியை பார்க்க காத்திருக்கிறோம். அவர் கை அசைத்தால் எங்களுக்கு போதும் என்றும் தெரிவித்தனர். எங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நாங்கள் விஜய் ரசிகராக உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
ஒகேனகல்லை சேர்ந்த ரசிகர் சந்தோஷ் என்பவர் கூறுகையில், நேற்று இரவு ஊரிலிருந்து கிளம்பி இன்று நான் காலை 5 மணிக்கு வந்தேன். இன்னும் உணவு அருந்தாமல் காத்திருக்கிறேன். கடவுளை கூட பார்த்து விடலாம். தளபதியை காண்பது கடினம். அவரை சந்திப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்கிறேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. அவர் வீட்டில் இருந்து பாலூன் வந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தளபதி எங்களை பார்க்கும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று கூறினார்.