முக்கியச் செய்திகள் சினிமா

நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை-நடிகர் மாதவன்

நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை; அதன் காரணமாக தான் இந்த படம் எடுக்க நினைத்தேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன்
எடுத்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி’. மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார்.
இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

நடிகர் மாதவன் நம்பி நாராயணனை சந்திக்கும் முன் இருந்த மாதவனும் அவரை சந்தித்த பின்னர் இருக்கும் மாதவனும் வேறு. நிறைய வித்தியாசம் உள்ளது. இந்தக் கதையை எழுத 7 மாதம் ஆனது. நம் நாட்டில் தேச பக்தர்கள் இரண்டு விதமாக உள்ளனர். தினமும் தன்னுடைய உயிரை பயணம் வைத்து அவர்கள் செய்த சாதனைகள் வெளியில் தெரியாமல் இருப்பவர்கள் ஒரு ரகம்.

நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை. அதன் காரணமாக தான் இந்த படம் எடுக்க நினைத்தேன். விகாஸ் என்ஜினை கண்டுபிடித்ததால் தான் இவருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது. இந்த விகாஸ் என்ஜின் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. ராக்கெட் விஞ்ஞானி பற்றி ஒரு படத்தை விஷுவலாக காட்டுவது கடினம்.

என் வாழ்க்கையில் எந்தப் படத்தையும் நான் இயக்கியது இல்லை. படப்பிடிப்பு தொடங்க இருந்த 25 நாட்களுக்கு முன்பு இயக்குனர் இந்த படத்தை இயக்கவில்லை என்று சென்றுவிட்டார். மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும். இந்தப் படத்தை இயக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததால் நானே இயக்கினேன்.

3 மொழிகளில் 8 நாடுகளில் எடுக்கப்பட்ட படம் இது. கிட்டத்தட்ட 6 மாதம் ஒத்திகை செய்து தான் இந்தப் படத்தை எடுத்தோம். என்னுடைய பல்லை நான் இந்தப் படத்திற்காக மாற்றியுள்ளேன்.

உடல் எடையை கூட்டி மீண்டும் 14 நாட்களில் உடல் எடையை குறைத்து நம்பி நாராயணன் போலவே இருக்க வேண்டும் என அனைத்தையும் உண்மையாகவே உருவாகி உள்ளேன்.
பல உண்மைகளை இந்தப் படத்தில் காட்ட முடியாமல் போனது. அவருடைய வாழ்க்கையை முழுவதுமாக பதிவு செய்ய 12 மணி நேரம் தேவைப்பட்டது. படத்திற்காக எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை. ஷாருக் கான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என என்னிடம் கேட்டார். ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்திரமாக இருந்தால் கூட போதும் நான் நடிக்கிறேன் என்றார்.

படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட காசு வாங்கவில்லை. நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் நடித்ததற்காக ஊதியம் வாங்கவில்லை. அவருக்கு நான் ஒரு சிறிய பரிசு கூட கொடுக்கவில்லை என்று நினைக்கும்போது அவமானமாக உள்ளது என்றார் மாதவன்.

இப்படம் வருகிற ஜூலை1ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்
வெளியாக உள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் வழி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு? – அமைச்சர் பதில்

Saravana Kumar

நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்

Ezhilarasan

முன் மாதிரி கிராம விருது; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Arivazhagan CM