நடிகை ரெஞ்சுஷா மேனன், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். நேற்று ரெஞ்சுஷாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மரணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகை அபர்ணா நாயர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் மறைவதற்குள் ரெஞ்சுஷா மேனன் செய்தி வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







