சென்னையை அடுத்த சேலையூரில் இரண்டடுக்கு கட்டத்தை ஜாக்கி மூலம் நகர்த்த தூக்கியப்போது எதிர்பாரத விதமாக சீலிங் சரிந்ததில் கட்டடம் சரிந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.மற்ற இருவரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.
சேலையூரை கர்ணம் தெருவை சேர்ந்தவர் லஷ்மி.இவர் தனது இரண்டடுக்கு வீட்டை ஜாக்கி மூலம் நகர்த்த முடிவு செய்து அதற்கென பொறியாளர் ஒருவர் மூலமாக வேலைகளில் ஈடுபட்டு வந்தார். கட்டிடத்தை ஜாக்கி மூலம் நகர்த்தும் பணியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல கட்டிடத்தை ஜாக்கி மூலம் தூக்கியப்போது
எதிர்பாரத விதமாக சீலிங் சரிந்ததில் கட்டடம் சற்று சரிந்தது.இதில் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் மூன்று தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாம்பரம்,மேடவாக்கம் தீயணைப்புத்
துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதில் இடிபாடுக்குள் சிக்கிய பேஸ்கார் (28) என்பவர் உயிரிழந்தார்.மேலும் ஒம்கார் என்பவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.மற்றொருவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கட்டிட பொறியாளர் அருகில் இல்லை, தொழிலாளர்களுக்கு முறையான தலைக்கவசம் இல்லாததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—-வேந்தன்







