முக்கியச் செய்திகள் தமிழகம்

 “போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை” மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிப்பட்டால் ரூபாய் 1000/- அபாரதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என எச்சரிக்கைவிடுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவையில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அங்கீகாரம் உண்டு என்றும், மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி நபர்களிடம், கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால், ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது என்றும், மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கபடுவதாக புகார் எழுந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர், அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட (பதிவு செய்யப்பட்ட) மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ள அவர், போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், முதன்முறை,1000ரூபாய் அபராதம், இரண்டாவது முறை 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத கடுங்கால் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்க சட்டத்தில் இடமுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

பண்ருட்டி தொகுதி வேட்பாளர் வேல்முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு!

Gayathri Venkatesan

ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

Gayathri Venkatesan