முக்கியச் செய்திகள் தமிழகம்

கால்நடை மருத்துவமனைகளில் காலிபணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 49 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tanuvas.ac.in இணையதளத்தில் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம்.

எந்த கல்லூரி? என்ன பணியிடம்? ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் தகுதி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

ரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்‌ஷன் என்ன?

Saravana Kumar

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’போஸ்டர் வெளியீடு

Gayathri Venkatesan

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

Ezhilarasan