முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியாய விலைக் கடையில் அரிசி தரமாக உள்ளது: அமைச்சரிடம் நன்றி தெரிவித்த மூதாட்டி

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக உள்ளது எனவும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பாராட்டு தெரிவித்த மூதாட்டி அமிர்தவள்ளி.

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குளிக்கரை பகுதியில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கட்டிடத்தினை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார். பின்னர் பயனாளிகளுக்கு அரிசி, சீனி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அரிசி வாங்க வந்த அமிர்தவள்ளி என்ற மூதாட்டி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமாக இருப்பதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து நன்றாக சாப்பிடுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது..இங்கு அரிசி வாங்க வந்த மூதாட்டி அரிசி மிகவும் தரமாக இருப்பதாக கூறி எங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற 14 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறோம் என்றார்.

இதனையடுத்து பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தமிழக அரசுக்கு கடம்பங்குடி, குளிக்கரை தோப்புத்துறை பகுதிகளில் பகுதி நேர அங்காடி அமைக்க கோரிக்கை விடுத்தார். உடனடியாக பகுதி நேர அங்காடி பிரிக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் , பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பாத்திமா சுல்தான் மூலமாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை – பாதுகாப்பு கேட்டு இந்துக்கள் போராட்டம்

Mohan Dass

’இன்றைய போட்டியில் அஸ்வினை கண்டிப்பா களமிறக்கணும்…’ முன்னாள் பயிற்சியாளர்

Halley Karthik

அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Dhamotharan