முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம் தமிழகம் வாகனம்

நாளை வருகிறான் “ராயல் வேட்டைக்காரன்”!


ஜெயகார்த்தி 

கட்டுரையாளர்

புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து புதிய பைக் ஒன்று நாளை விற்பனைக்கு வருகிறது. வேட்டைக்காரன் (Hunter350cc) என்று பெயரிடப்பட்ட அந்த பைக்கைப் பற்றியும், அதன் சிறப்புகள் குறித்தும், எதற்கு அது போட்டியாக இருக்கப்போகிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்…
கேட்டவுடன் ஈர்க்கும் RE சப்தம்
டொட்… டொட்… டொட்… டொட்… என்று சப்தம் கேட்டு, அதன் பின்னால் ஓடிய காலம் எல்லாம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. இப்போது கிராமத்தில் சிலரிடமும் , நகர்ப்புறத் தெருக்களில் காணும் இடங்களில் எல்லாம் ராயல் என்ஃபில்ட் தான்.  ஆடிப்பெருக்கு தினத்தன்று என்ஃபீல்ட் பைக்கின் விற்பனை  அதிகரித்து காணப்பட்டது. கல்யாண பைக்காக பார்க்கப்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் போலவே, ராயல் என்ஃபீல்ட் என்பது வீட்டுக்கு வீடு கனவு பைக்காக மாறி வருகிறது.  இந்த நேரத்தில் தான்  அந்த நிறுவனம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை நாளை அறிமுகம் செய்கிறது. வேட்டைக்காரன் 350சிசி (Hunter 350cc) என்று பெயரிடப்பட்ட ஒரு பைக்கை நாளை முதல் விற்பனைக்கு வைக்கிறது. 
ஹண்டர் 350சிசி சிறப்பம்சங்கள்
ஹண்டர் 350சிசி மோட்டார் சைக்கிளானது மெட்ரோ, ரெட்ரோ என இரண்டு வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது. 181 கிலோ எடை கொண்ட அந்த பைக்கானது, அதிகபட்சமாக மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.  இந்த ஹண்டரில், மற்ற ராயல் என்ஃபீல்ட் 350சிசி மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தக்கூடிய அதே எஞ்சின் தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றாலும் கியர் பாக்ஸ் அளவு மட்டும் “கிளாசிக்” மற்றும் “மெட்டியோர்” வகைகளை விடப் பெரியதாக இருக்கிறது. “மெட்டியோர் 350”-ல் பயன்படுத்தப்படும் சஸ்பென்ஷனே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இருக்கையின் உயரம் 800 எம்எம், கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 எம்எம், எரிபொருள் டேங்க் அளவு 13 லிட்டர்.  மெட்ரோ வெர்ஷன் மோட்டார் சைக்கிளில் 17 அங்குல அலாய் சக்கரங்கள், முன்புறம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ மாடலில் டிரம் பிரேக் உள்ளது.   ஹண்டர் 350சிசி-யின் இரண்டு மாடலும், 349சிசி ஒற்றைச் சிலிண்டர் திறனுடன் இயங்கும் வடிவிலானது. எஞ்சினின் அதிகபட்ச திறனானது 20.2bhp @ 6,100rpm திறன் கொண்டது.
எதனுடன் போட்டி?
ஹண்டர் 350சிசி மோட்டார் சைக்கிளானது, ஹோண்டா CB350RS, ஜாவா 42 மற்றும் அண்மையில் களமிறக்கப்பட்ட டிவிஎஸ் ரோனினுக்கு (TVS Ronin) போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. புதிய வகை என்ஃபீல்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை  ரூ.1.30 லட்சத்திலிருந்து ரூ.1.45 லட்சம் வரை இருக்கும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ஃபில்டை விரும்புவது ஏன்?
ராயல் என்ஃபீல்ட்டை விரும்புவது ஏன், அதன் சிறப்பம்சம் என்ன என்பது பற்றி அதனைப் பயன்படுத்தி வருவோரிடம் கேட்டோம். அதற்கு ஒரு நீண்ட பட்டியலையே கொடுத்துவிட்டனர். தமிழ்நாட்டில் மட்டுமே ராயல் என்ஃபீல்ட் தயாரிக்கப்படுகிறது, இன்னும் இரும்பினால் செய்யப்படும் வாகனம், கம்பீரத் தோற்றம் என்று அவர்களுடைய பட்டியல் நீள்கிறது. ஒரு காலத்தில் அதன் சப்தமே ஈர்க்கக்கூடியதாக இருந்ததாகவும்  Made Like a Gun என்ற வாசகமே RE பைக்குகளுக்கு மேலும் மெருகூட்டுவதாகவும் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
ராயல் என்பீல்ட் Hunter 350cc, Metro & Retro என்ற பெயரில் களம் இறக்கியுள்ள இந்த புதிய வேட்டைக்காரன் எப்படி வாகன ஓட்டிகளின் மனங்களை வேட்டையாடப் போகிறான், விற்பனையில் சாதனை படைப்பானா?  என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும்.
– ஜெயகார்த்தி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘இடா’ புயல் தாக்கம்; நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

G SaravanaKumar

வீட்டிலேயே பிரசவம்; கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்

Halley Karthik