திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஃபஹத் ஃபாசில் ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார்.
தந்தை பாசில் இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பகத் பாசில். இதனைத்தொடர்ந்துபல மொழிகளில் அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் ‘வேலைக்காரன்’, ‘சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதுவரை சுமார் 50 படங்களில் அவர் நடித்துள்ளார்.
தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில், தனது திருமண நாளான்று ரூ.2.70 கோடி மதிப்புள்ள லாண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 சொகுசு கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஃபஹத் தன் வீட்டில் போர்ச், மினி கன்ட்ரிமேன், லம்போகினி உரூஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 740ஐ உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.







