சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல்…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தாமன் சண்முகரத்னம் உள்ளிட்ட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிட 6 விண்ணப்பித்திருந்த நிலையில் 3 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்ட்டது.

இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.