முகம் பார்த்திராத முகநூல் காதல்; காதலி இறந்ததால் காதலனும் உயிரிழப்பு

நேரில் சந்திக்காமலேயே, முகநூல் மூலம் பழகி வந்த பெண் உடல் நலக்குறைவால் இறந்ததால், அதிர்ச்சியடைந்த இளைஞர், விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலதேனூர்…

நேரில் சந்திக்காமலேயே, முகநூல் மூலம் பழகி வந்த பெண் உடல் நலக்குறைவால் இறந்ததால், அதிர்ச்சியடைந்த இளைஞர், விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மணிகண்டன், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக, முகநூல் மூலம் பர்மாவைச் சேர்ந்த பூமிகா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளாமலேயே, செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பூமிகா திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகே, பூமிகா இறந்த தகவல், மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன், மேலதேனூருக்கு திரும்பியுள்ளார். அங்கு சோகத்திலிருந்த அவர், இறுதியாக உறவினர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு பின்பு எலி மருந்தைக் குடித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். பின்னர், தாமாகவே மருத்துவமனைக்குச் சென்று, தமது மனைவி இறந்துவிட்டதால், விஷம் குடித்துவிட்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலியின் முகத்தைக் கூட பார்க்காமல் முகநூல் மூலம் பழகி அடையாளம் தெரியாத பெண்ணிற்காக உயிரை விட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.