பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்…

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் என்று கூறினார். அன்றைய தினம் நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

காகிதமில்லா நிதிநிலை அறிக்கையாக இது இருக்கும் எனவும், நிதிநிலை அறிக்கை முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும், சபாநாயகர் கூறினார். வேளாண் பட்ஜெட் தாக்கல் தேதி குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அத்துடன் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22 ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கை ஆகியவையும் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து வேளாண் பட்ஜெட் குறித்து அறிவிக்கப்படும். துறைரீதியான மானிய கோரிக்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் அதன்படி தொடர்ந்து நடத்தப்படும்.

இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என பொதுமக்களிடையே பெரிதும் எதிர்பார்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.